ஸ்ரீலங்கா இன்ஸுரன்ஸ் வெடிகுண்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது – UPDATE
In ஆசிரியர் தெரிவு May 2, 2019 3:21 am GMT 0 Comments 5084 by : Varshini
ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வெடிகுண்டு இல்லையென பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகளும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தின் மலசலகூடத்தில், கைவிடப்பட்ட நிலையில் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பீதியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி பொலிஸாருக்கு அறிவித்தனர். குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சகிதம் அங்கு சென்று சென்ற பொலிஸார் மற்றும் இராணுவம், குறித்த பொதியை பரிசோதித்து அங்கு குண்டு அல்லது வெடிபொருட்கள் இல்லையென்பதை உறுதிசெய்துள்ளது. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு?
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது.
இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சோதனையிடப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.