ஹட்டனில் பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு
ஹட்டனில் 154 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகள் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தலைமையில் இடம்பெற்றது.
யுத்த காலத்தில், பொலிஸ் சேவையின் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களது சேவைகளும் நினைவுகூரப்பட்டது.
உயிர் நீத்த பொலிஸாரின் உறவுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
இதில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.