கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (புதன்கிழமை) காலை ஹட்டன் பொலிஸார்இவரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் குடாகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவர் நீண்ட காலமாக மற்றுமொருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர், மேலதிக விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.