‘ஹரிபொட்டர்’ தொடரின் புதிய டிரெய்லர் வெளியீடு
‘Fantastic Beasts: The Crimes of Grindelwald’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரிபொட்டர் தொடரின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கு ஜே.கே ரோலிங் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஏதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அமெரிக்காவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சில இணைய சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.
நாகினி, வோல்ட்மோர்ட் பாம்பு மற்றும் ஹோர்கிறக்ஸாக கிளாடியா கிம் நடிப்பது இனவெறி என டுவிட்டரில் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ரோலிங், ”நாகா என்பது இந்தோனேஷிய புராணங்களில் பாம்பு போன்ற உயிரினம். அதனால் நாகினி என்ற பெயர் வைக்கப்பட்டது. இவை சில நேரங்களில் அரை மனிதனாக பாதி பாம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன” என பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.