ஹற்றனில் தீ விபத்து: இரு வீடுகள் சேதம்
In இலங்கை September 24, 2018 5:01 am GMT 0 Comments 1790 by : Yuganthini
ஹற்றன், வெலிங்டன் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீயில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறித்த வீடுகளில் இருந்த 08 பேரும் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மின்சார கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தீ விபத்தினால், உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், மற்றும் பாடப் புத்தகங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.