ஹொட்பொயின்ற் மற்றும் இன்டெசிற் சலவை இயந்திரங்களில் தீ அபாயம்
In இங்கிலாந்து December 17, 2019 3:27 pm GMT 0 Comments 8316 by : S.K.Guna

வேர்ல்பூல் நிறுவனத்தின் சலவை இயந்திரங்கள் (Whirlpool washing machines) தீ அபாயம் காரணமாக மீளப்பெறப்படுகின்றன.
பிரித்தானியாவில் விற்கப்பட்ட 519,000 சலவை இயந்திரங்களின் கதவு பூட்டுதல் அமைப்பின் ஏற்பட்ட பிழையால் தீ அபாயப் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.
தமது தயாரிப்புக்களான ஹொட்பொயின்ற் மற்றும் இன்டெசிற் சலவை இயந்திரங்களே மீளப்பெறப்படுகின்றன என்று உற்பத்தியாளர் நிறுவனமான வேர்ல்பூல் தெரிவித்துள்ளது.
ஒக்ரோபர் 2014 முதல் பெப்ரவரி 2018 வரை பிரித்தானியாவில் விற்கப்பட்ட 519,000 சலவை இயந்திரங்களின் கதவு பூட்டுதல் அமைப்பின் ஏற்பட்ட பிழையால் அவற்றில் அதிக வெப்பம் மற்றும் தீ பிடிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஹொட்பொயின்ற் அல்லது இன்டெசிற் சலவை இயந்திரத்தை வாங்கிய உரிமையாளர்கள், அவை பாதிக்கப்பட்டுள்ளனவா? என்பதைக் கண்டறிய வேர்ல்பூல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் அவற்றின் பாவனையை உடனடியாக நிறுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
நன்றி news.sky.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.