1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது
In இலங்கை May 8, 2019 3:17 am GMT 0 Comments 2221 by : Dhackshala

கடுவெல – நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உரப்பையொன்றிலிருந்து குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் வசமிருந்த ரவைகளில் ரி–56 ரக ரவைகள் 205, 9 மில்லிமீற்றர் அளவிலான 640 ரவைகள், ரி-56 ரக ரவைகள் 40, ரி–56 ரக மகசீன் ரவைகள் 2,9 மில்லிமீற்றர் நீளமுடைய மகசீன் துப்பாக்கி மற்றும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.