10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள தாய்லாந்து திட்டம் !
In ஆசியா December 20, 2020 7:43 am GMT 0 Comments 1485 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று உறுதியான 500 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணபட்டவர்களில் பெரும்பாலோர் தலைநகருக்கு அருகிலுள்ள இறால் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரி ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இந்நிலையில் புதன்கிழமைக்குள் தென்மேற்கு மாகாணமான சாமுத் சாகோனில் 10 ஆயிரத்து 300 பேருக்கு சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று சீனாவிற்கு வெளியே முதலாவதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்தில் 4,907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 60 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
சமுத் சாகோனில் குடியேறிய தொழிலாளர்களில் பெரும்பாலோர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் தாய்லாந்தை விட மிக மோசமான அளவு கொரோனா தொற்றினால் மியன்மார் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.