விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மெளனம் காக்கின்றனர் – ஜீவன் தொண்டமான்!
மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இவ்வாறான நிலையில் பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மௌனம் காக்கின்றனர்.
கொட்டகலை கடந்த 4 வருடங்களாக மறக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திகளை மேற்கொண்டால் அதன் பெயர் தொண்டமானுக்கு சென்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணம்.
மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் ஏன் இப்போது வாழ்த்த மறுக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது கொவிட் நிலைமை இலங்கையிலும், உலகத்திலும் பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் மக்கள் மிகுந்த பொறுமையுடன் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் அரச இயந்திரம் இயங்குகின்றது. கொரோனாவின் அச்சுறுத்தல் மலையகத்தை பாதித்துள்ளது. ஆயிரம் தொடர்பிலேயே பேசுகின்றனர்.
தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் காணாமல் போயுள்ளன. தோட்ட தொழில் கௌரவமற்றது என நினைப்பது தவறு. மாறாக அதை செய்விக்கின்ற முறைமையே தவறானது.
தோட்ட தொழில்துறையை நவீனமயப்படுத்தி கௌரவித்தால் அந்த துறையை பாதுகாக்க முடியும். மலையக கல்வித் தரம் வீழ்ச்சிக்கு வழங்கல் இல்லாமையே பிரதான பிரச்சினை. சு
காதார வழிமுறைகளை முறையாக கைக்கொள்வதன் மூலமே கொவிட் தொற்றை மலையகத்திலிருந்து ஒழிக்க முடியும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.