13வயது சிறுவன் குத்திக் கொலை: பதின்மவயது ஐந்து பேர் கைது!
In இங்கிலாந்து January 4, 2021 7:23 am GMT 0 Comments 1879 by : Anojkiyan

13வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, நான்கு சிறுவர்களும் சிறுமியும் கொலை செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 16:00 மணியளவில் Bugs Bottom fields, Emmer Green பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 13 அல்லது 14 வயதுடைய ஐந்து இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் உள்ளனர்.
சிறுவனின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முறையான அடையாளம் காணப்படவில்லை என்றும் தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
15:00 மற்றும் 16:30 மணிக்க்கு இடையில் அப்பகுதியில் இருந்த எவரும் சந்தேகத்திற்கிடமான எதையும் கவனித்திருந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.