13 மரணங்களும் கொழும்பிற்கு வெளியே பதிவாகியுள்ளன – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
In இலங்கை February 18, 2021 7:45 am GMT 0 Comments 1238 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் நேற்று பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள், குறிப்பாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, நாட்டின் மொத்த கொரோனா மரணங்களில் 60-65% கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பதிவாகியதாக குறிப்பிட்டார்.
இருப்பினும் நேற்று பதிவாகிய 13 இறப்புகளும் வெளி பகுதிகளில் பதிவாகியதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே கூறினார்.
ஆகவே, வைரஸ் தொடர்பான அதிக இறப்புகளைத் தவிர்ப்பதற்காக, கடுமையான திட்டத்தை சுகாதார அமைச்சு செயற்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.