14 வயது சிறுவனின் மிகப்பெரிய உதவிக்கு பரிகாரம் செய்யும் அப்பிள் நிறுவனம்

அப்பிள் நிறுவனத்தின் செயலியில் காணப்பட்ட பெரும் பிழையைக் கண்டுபிடித்து தெரிவித்த சிறுவனுக்கு அந்நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
அப்பிளின் ஃபேஸ்டைம் செயலியில் பயனர் விவரங்களை ஒட்டுக்கேட்கும் பிழை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் ஃபேஸ்டைமில் காணொளி அழைப்பு வசதி நிறுத்தப்பட்டது.
அத்துடன் பிழையைக் கண்டறிந்த சிறுவனின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அப்பிள் அறிவித்துள்ளது. மேலும் தோம்சன் மற்றும் டேவென் மொரிஸ் குடும்பத்தாருக்கு அப்பிள் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
Group Facetime கோளாறு முதலில் அரிசோனாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் திகதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை. எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.
பின்னர் சிறுவனின் தாயார் மிஷல் தோம்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி அப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது.
ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐ போன், ஐ பட் மற்றும் மக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் Group Facetime அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.
தற்போது குறித்த பிழை சரி செய்யப்பட்டதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.