பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதுவரை காலமும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வயது எல்லை 15 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், தற்போதிருந்தே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும், பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென்றும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.