15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு

15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலியின் தென்பகுதியில் இந்த பாதச்சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்கக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பாதச்சுவடு இதுவென ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டில் இதனை முதன்முதலில் Universidad Austral of Chile ஆய்வுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடித்தார்.
அது விலங்கு ஒன்றின் சுவடாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் அப்போது ஊகித்தனர். பின்னர் அது மனிதனின் பாதச்சுவடு என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் அமெரிக்கக் கண்டத்தில் நடமாடியுள்ளனர் என்பதை குறித்த பாதச்சுவடு புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.