17 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றல்: இருவர் கைது!

17 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை ரொறன்ரோ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு தனித்தனி விசாரணைகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதனையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் கடத்தல் நோக்கத்திற்காக வைத்திருத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இரண்டு விசாரணைகளும் தொடர்பில்லாதவை என பொலிஸார் கூறுகின்றனர்.
வாகனை சேர்ந்த 23 வயது இளைஞரும், எட்மண்டனைச் சேர்ந்த 26 வயது இளைஞருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மாத இறுதியில் தனி திகதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சுமார் 150 கிலோகிராம் படிக மெத், கொகோயின், ஃபெண்டானில் மற்றும் ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், இதன்போது, இரண்டு துப்பாக்கிகளையும் சுமார் அரை மில்லியன் டொலர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மிசிசாகாவில் ஒரு முகவரி, பெண்டானில் ஆய்வகமாகவும், மருந்துகள் விநியோகமாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.