சிங்கப்பூரில் சிக்கித் தவித்த மாணவர்கள் நாடு திரும்பினர்!
சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 186 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல்-302 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானமானது இன்று காலை 7.30 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டிருந்தது.
விமானத்திலிருந்து தரையிறங்கிய மாணவர்களை இலங்கை விமானப் படையினரும் சுகாதார அதிகாரிகளும், கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தினர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவ பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.