200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ புதிய புரட்சி

தென்னிந்திய சினிமாவில் பாடல் புரட்சி என்றால் அண்மையில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் தான்.
இப்பாடல் காணொளியாக ஜனவரி 2 ஆம் திகதி யூ-டியூப்பில் வெளியாகி பல சாதனைகளைச் செய்துவருகிறது.
இன்று யூ-டியூப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற மைல் கல்லை 43 நாட்களில் தொட்டுள்ளது ‘ரவுடி பேபி’.
அந்தவகையில், தென்னிந்திய சினிமாவில் அதிகமானோரால் கவரப்பட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் முதலிடத்தில் நிலைத்துநின்ற ‘வை திஸ் கொலைவெறி’ பாடலை 37 நாட்களில் ஓரங்கட்டியது இப்பாடல்.
அதேபோல் தென்னிந்தியாவில் முதலிடத்திலிருந்த ‘வச்சிண்டே’ பாடலை 39 ஆவது நாளில் முறியடித்து ‘ரவுடி பேபி’ சாதனை படைத்தது.
இப்போது சாதனைகளின் உச்சமாக 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
‘மாரி-2’ படத்திற்காக ‘ரவுடி பேபி’ பாடலை தனுஷ் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இப்பாடலை தனுஷூடன் டீ பாடியுள்ளார்.
தனுஸ் மற்றும் சாய் பல்லவியின் நடனம், இசை, காட்சியமைப்பு என ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள இப்பாடல் அடுத்து 250 மில்லியன் பார்வையாளர்கள் என்ற இலக்கை விரைவில் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.