2017 நோபல் பரிசு வெற்றியாளருக்கு மற்றுமொரு விருது!
In இங்கிலாந்து September 13, 2018 11:42 am GMT 0 Comments 1537 by : Farwin Hanaa

ஜப்பானின் ‘Rising Sun, Gold and Silver Star’ விருதினை ஜப்பானில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான கசுவோ இஷிகுரோ பெற்றுள்ளார். குறித்த விருது வழங்கும் விழா லண்டனில் இடம்பெற்றது.
2017ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற கசுவோ இஷிகுரோ (வயது-63) இதுபற்றி குறிப்பிடுகையில், ஜப்பான்-பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கும் தான் ஒரு பாலமாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாவல் ஆசிரியரும் திரைக்கதை மற்றும் சிறுகதை எழுத்தாளருமான கசுவோ இஷிகுரோ, ஜப்பானின் நாகசாகி நகரில் பிறந்தார்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர், கடந்த 1960ஆம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.