News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை!
  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  1. முகப்பு
  2. உதைப்பந்தாட்டம்
  3. யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதை பெறுகிறார் டேவிட் பெக்காம்!

யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதை பெறுகிறார் டேவிட் பெக்காம்!

In உதைப்பந்தாட்டம்     August 22, 2018 8:01 am GMT     0 Comments     2096     by : Anojkiyan

2018ஆம் ஆண்டுக்கான யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருது இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டேவிட் பெக்காமிற்கு வழங்கப்படவுள்ளது.

யு.இ.எப்.ஏ.வின் தலைவருக்கான விருதானது சிறந்த சாதனைகள், தொழில்முறை சிறப்பம்சம் மற்றும் முன்மாதிரியான தனிப்பட்ட குணங்களை அங்கீகரித்து வழங்கப்படும் உயரிய விருதாகும்.

இதற்கமைய, மகத்தான வாழ்க்கை மற்றும் மனிதாபிமான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த விருது இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும் மத்தியக் கள வீரருமான டேவிட் பெக்காம்மிற்கு வழங்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பினை யு.இ.எப்.ஏ. சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய இந்த விருது வருட இறுதியில் மொனோக்கோவில் வைத்து பெக்காமிற்கு வழக்கப்படும்.

இதுவிருது கிடைக்கப் பெறுவது குறித்து மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ள டேவிட் பெக்காம் கூறிய கருத்துக்கள் இவை, “எனது வாழ்க்கையில் நூறுவிதமான முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கின்றேன். அணியின் மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக, முன்னதாக இந்த விருதை வென்ற வீரர்களின் பட்டியலில் நானும் இடம்பெறுவதை எண்ணி பெருமைப்படுகிறேன்” என கூறினார்.

டேவிட் பெக்காம், தலைமுறைக்கான சிறந்த கால்பந்து அடையாளம் என யு.இ.எப்.ஏ.வின் தலைவர் அலெக்ஸாண்டர் செஃபெரின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணிகளின் சிறந்த மத்திய கள வீரர் என்ற விருது, சிறந்த கால்பந்து வீரர் விருது என பல விருதுகளை பெற்றுக்கொண்ட பிறகு, இந்த விருதை பெக்காம் பெறுகிறார்.

டேவிட் பெக்காம், யுனிசெப் மற்றும் மலேரியா நோய்த் தொற்று தடுப்பு அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் திகழ்கிறார்.

அத்தோடு, ஆபிரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளதோடு, அங்கு அறக்கட்டளையும் நிறுவி உதவிகளை புரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டில் 20 ஆண்டுக்காலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த டேவிட் பெக்காம், கழக மற்றும் தேசிய அணிகள் என மொத்தம் 762 போட்டிகளில் விளையாடி 130 கோல்களை அடித்துள்ளார்.

இங்கிலாந்து தேசிய அணிக்காக மட்டும், 115 போட்டிகளில் விளையாடி 17 கோல்களை அடித்துள்ளார். அத்தோடு மூன்று உலகக்கிண்ண தொடர்களிலும் விளையாடியுள்ளார்.

43 வயதான டேவிட் பெக்காம், 19 கழக கிண்ணங்களையும், 10 லீக் சம்பியன் பட்டங்களையும் வென்றுக் கொடுத்துள்ளார்.

ஆறு பீரிமியர் லீக் சம்பியன் லீக் பட்டங்கள், இரண்டு எஃப்.ஏ கிண்ணங்கள் மற்றும் சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும், ஒரு லா லிகா கிண்ணம் என ஏராளமான சம்பியன் பட்டங்கனை பெக்காம் வென்றுக் கொடுத்துள்ளார்.

இவர் முன்னணி கழக அணிகளான மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மெட்ரிட், ஏ.சி. மிலான், பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் ஆகிய கழக அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்த விருதை பெறும் மூன்றாவது இங்கிலாந்து வீரர் இவராவார். இதற்கு முன்னதாக கடந்த 2002ஆம் ஆண்டு பொபி ராப்சனும், 2008ஆம் ஆண்டு பொபி சார்ல்டனும் இந்த விருதை பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சம்பியன்ஸ் லீக்: மன்செஸ்டர் யுனைடெட்- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் தீவிர பயிற்சி  

    ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்

  • FIFA கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரை வென்றது ரியல் மாட்ரிட்!  

    ஏழு முன்னணி கழக அணிகள் பங்கேற்று விளையாடிவரும் பீபா கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரை ஸ்பெயினின்

  • தொடர் தோல்வி – ரியல் மாட்ரிட் தலைமை பயிற்சியாளர் நீக்கம்!  

    தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கப

  • அனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி!  

    ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்

  • புதிய சுவையில் espresso! – முதலில் சுவைப்பது இத்தாலி  

    உலகின் மிகப்பெரிய கோப்பி விற்பனை நிறுவனமான ஸ்டார் பக்ஸ், புதிய கோப்பி பதப்படுத்தலை மேற்கொண்டு தற்போத


#Tags

  • (Real Madrid)
  • AC Milan
  • David Beckham
  • England football team
  • Manchester United
  • Paris Saint-Germain
  • இங்கிலாந்து கால்பந்து அணி
  • ஏ.சி. மிலான்
  • டேவிட் பெக்காம்
  • பரிஸ் செயிண்ட் ஜெர்மைன்
  • மென்செஸ்டர் யுனைடெட்
  • ரியல் மெட்ரிட்
    பிந்திய செய்திகள்
  • தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை!
    தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதாக எச்சரிக்கை!
  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
    புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்!
    உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்!
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.