2018ஆம் ஆண்டு இந்திய அழகிக்கு பாராட்டு விழா!
In இந்தியா September 11, 2018 7:35 am GMT 0 Comments 1362 by : Farwin Hanaa
இந்தியாவின் 2018ஆம் ஆண்டு அழகியாக அண்மையில் முடிசூட்டப்பட்ட நெஹால் சுதசாமாவிற்கு மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அவர் கல்விகற்ற உயர் பாடசாலையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெஹால் சுதசாமாவை (வயது-21) கௌரவிக்கும் வகையில், பாராட்டு விழா மற்றும் ஆடை அலங்கார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நெஹால் சுதசாமா விசேட அதிதியாக கலந்துகொண்டார்.
அண்மையில் இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான இந்திய அழகிப் போட்டியில் நெஹால் சுதசாமா வெற்றி பெற்று முடிசூடியதுடன் அதித்தியா ஹந்தியா Supranational பட்டத்தினையும் பெற்றார்.
2018ஆம் ஆண்டு இந்திய அழகியாக மகுடம் சூடிய நெஹால் சுதசாமா, எதிர்வரும் டிசம்பர் மாதம் பாங்கொக்கில் இடம்பெறவுள்ள 67ஆவது உலக அழகிப் போட்டியில் இந்தியாவினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.