2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசவில்லை-கோட்டாபய
In இலங்கை March 12, 2018 12:51 am GMT 0 Comments 1323 by : Arun Arokianathan
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பசில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம் வரும் போது, மகிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார்.
ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.
குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில் மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார். அதுபோல, இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது மக்கள், தமது ஜனாதிபதி வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.