2021 ஒக்டோபரில் இந்தியாவில் இயல்பு வாழ்க்கை திரும்பும்- சீரம் இந்தியா

எதிர்வரும் ஒக்டோபருக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டுவிடும் எனவும் அதன்பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பும் எனவும் சீரம் இந்தியா நிறுவன இயக்கநர் அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக மாநாடு ஒன்றில் பேசிய அவர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் அரசின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
எனவே, புத்தாண்டில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என நம்புவதாகவும் நாட்டு மக்களில் 20வீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன், அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களது தடுப்பூசி பரிசோதனையின் இறுதிக்கட்ட முடிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசின் தடுப்பூசிக் குழு கடந்த வாரம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.