26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்!
In இங்கிலாந்து June 23, 2019 9:32 am GMT 0 Comments 5386 by : Benitlas

நாய் ஒன்று 26 தடவைகள் இரத்ததானம் செய்து நூற்றிற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாயே கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை இரத்ததானம் செய்து 104 நாய்களை காப்பாற்றியுள்ளது.
குறித்த நாய் ஒவ்வொரு முறை இரத்ததானம் செய்யும்போதும் 450 மில்லி கிராம் இரத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் கருத்து வெளியிடுகையில், ‘ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் இரத்த தானம் செய்ய முடியும்.
பிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் இரத்த தானம் கொடுக்க ஆரம்பித்தது. இரத்த தானம் செய்த பின் அந்நாய்க்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.