41 தொகுதிகள் தேமுதிகவிற்கு வழங்க வேண்டும்: பார்த்தசாரதி

கூட்டணி குறித்து, அதிமுக தலைமை விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கியதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இல்லையென்றால், தேமுதிக தேர்தலில் தனித்து போட்டியிட தயங்காது என்றார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தசாரதி, கூட்டணி குறித்து, அதிமுக தலைமை, விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.