5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்
In இலங்கை January 4, 2021 5:00 am GMT 0 Comments 1739 by : Dhackshala

சௌபாக்கிய தொலைநோக்கு கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஒருகொடவத்தை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
முதல் கட்டத்தின் கீழ் குறித்த வீட்டுத்திட்டம் கொழும்பு மாவட்டத்தின் ஒருகொடவத்தை, புளுமென்டல், மாலம்பே, மாகும்புர, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் பெஹலியகொடை பிரதேசத்திலும் கண்டி மாவட்டத்தின் கெடம்பே பிரதேசத்திலும் இந்த வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.