59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு!
In இந்தியா January 26, 2021 5:31 am GMT 0 Comments 1368 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது.
இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.