திருமதி சிவசாமி கனகம்மா
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்
12-09-1942 - 02-01-2018
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், குடத்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி கனகம்மா அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பெடியன்), கனகராணி(ராணி), இந்திராணி(சின்னன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், தனுசா, மதன், வனஜா, திவ்ஜா, கலைவாணி(கனடா), காலஞ்சென்ற ராஜ்குமார், பாபுராஜ்(சுவிஸ்), துஷாந்தினி, கவிதன், அஜந்தன்(பிரான்ஸ்), இந்திரராஜ், லக்சலா(நோர்வே), சரவணபவன்(பிரான்ஸ்), உஷாந்தினி, ஆனந்தபவன், நிஷாந்தினி, செல்வசந்திரன்(கனடா), செல்வரதன், திருமாலினி(சுவிஸ்), சுரேஸ்குமார், சுமன்(நோர்வே), அனிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஹசிகா(கனடா), சர்நிஷா(கனடா), தர்சேந்திரன், வர்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குடத்தனை வடக்கு, குடத்தனை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் இந்து சமய முறைப்படி பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |