Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பவானி சிவகுருநாதன்

மரண அறிவித்தல்

Dec 30th, 2017
1025
6+6+6+
பவானி சிவகுருநாதன்
யாழ். புங்குடுதீவு
09 05. 1941 - 21 .12. 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பவானி சிவகுருநாதன் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளானந்தம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுருநாதன்(விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர்- செட்டிக்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமதி(கனடா), வளர்மதி(கனடா), சிவதயாளன்(கனடா), கலைமதி(கனடா), தயாமதி(ஆசிரியை- இலங்கை), தயாபரன்(கனடா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பராசக்தி(இலங்கை), பரமரெத்தினம்(இலங்கை), லோகேஸ்வரி(ஈசக்கா- கனடா), காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ஜெயகோபி(Engineer- கனடா), லதா(கனடா), சசிதரன்(கனடா), சுஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சூறைசூடி மற்றும் திருநாவுக்கரசு(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபனா(கனடா), Dr. பாலச்சந்தர்(கனடா), கோபிநாத்(கனடா), லக்சனா(கனடா), அர்ச்சனா(கனடா), சிவஜெனாத்(கனடா), லக்ஸ்மிதா(கனடா), அக்சயா(கனடா), கிறிசிகேசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும், றிகான்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்