Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லோகநாதன் கலைச்செல்வி

மரண அறிவித்தல்

Nov 8th, 2017
1044
7878
லோகநாதன் கலைச்செல்வி
கிளிநொச்சி
12 .06. 1968 - 31.10.2017

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் கலைச்செல்வி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா(ஓய்வுபெற்ற உப அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), தங்கம்மா(ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், துஷானா, கதுர்ஷன், ஜனுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும், கலையரசி(ஆசிரியை- கிளிநொச்சி), பத்மகாந்தன்(சுவிஸ்), கலைவதனி(கனடா), பிரேமகாந்தன்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வராசா(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), ஜெயகெளரி(சுவிஸ்), தர்மராசா(கனடா), ஷஜனி(ஆசிரியை), இலட்சுமி(முரசுமோட்டை), தர்மலிங்கம்(வவுனியா), நடராசா(இரணைமடு), கணேஸ்வரி(இராமநாதபுரம்), பராசக்தி(இரணைமடு), சரஸ்வதி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை நடை பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்