Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரதம் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்

In ஆன்மீகம்
Updated: 14:24 GMT, Mar 31, 2014 | Published: 14:23 GMT, Mar 31, 2014 |
0 Comments
1940
icon_com
This post was written by : Webmaster
Tamil-Daily-News-Paper_65132868290

Tamil-Daily-News-Paper_65132868290

இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,  நீர்,பழரசங்கள் ,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்து மக்களிடம் பல்வேறு விசேஷ தினங்களில் இந்த விரதம் இருப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களால் ஏற்படும் நன்மை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வில் மூலம் தெரிவித்துள்ளார்கள். வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் இயக்கம் புதுப்பிக்கப்பட்டு தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை குறைக்கலாம் விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg