Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவலிங்கத்தின் தத்துவம்

In ஆன்மீகம்
Updated: 22:16 GMT, Apr 14, 2018 | Published: 09:29 GMT, Mar 18, 2015 |
0 Comments
1458
This post was written by : Elakkiya

சிவலிங்கம் என்பது இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனை குறிக்கும் ஒரு வடிவமாகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற மற்றும் இரண்டுக்கும் இடையிலான வடிவம் ஆகிய அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர்.

இவற்றில் சிவலிங்கம் என்பது அருவுருவ நிலையை குறிக்கின்றது.

இத்தகைய சிவனின் அருவுருவ நிலையை குறிக்கும் சிவலிங்கத்தின் தத்துவம் என்ன என்பதை அறிவோம். சிவம் என்றால் மங்களம் லிங்கம் என்றால் சுபம் என பொருள்படும். இதன்படி சுபத்தை மனதில் இருத்தினால் சித்தம் சிவமாக மாறும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

அதாவது நாம் உன்னை வணங்குகின்றோம் என மனதில் சிவனை இருத்தினால் நமது தேவைகள் அனைத்தும் நம்மை வந்தடையும் என்கிறது உபநிடதம்.

மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும் கண்ணப்பனை மெய்யனாக்கியதும் சிவலிங்கம். நமக்கு கிடைத்த பொருட்கள் யாவற்றையும் பிறருக்கு வாரி வழங்க பொருள் மீதிருக்கும் பற்று படிப்படியாக குறைவடைந்து பற்றற்ற நிலை உருவாகும். அத்தகைய நிலை தியாகம் எனப்படுகின்றது.

இத்தகைய தியாகத்தின் பெருமையை சுட்டிக்காட்டுவதே சிவலிங்கம் எனப்படுகின்றது. சிவலிங்கம் அமைதியே உருவான மனிதனிற்கு வழிகாட்டுகின்றது. உலகை அசைய வைத்து இயக்குகின்றது. உடல், மனம், வாக்கு, செயற்பாடு அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான் தான் என்று அடையாளம் காட்டுகின்றது சிவலிங்கம் என ஆன்மீகம் சிவலிங்கத்தை பலவாறு சித்தரிக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg