Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகரனின் ‘தனிகை': சிந்தனைக்குரிய குறும்படம்

In
Updated: 12:09 GMT, Aug 5, 2015 | Published: 11:56 GMT, Aug 5, 2015 |
0 Comments
1592
This post was written by : Varothayan
thanikai002

இணையங்களின் அபரிமிதமான வளர்ச்சி பல நல்ல விடயங்களை தந்தாலும் பல சமூகத்துக்கு ஒவ்வாத விடயங்களையும் விட்டுச் செல்கின்றது என்பது தான் உண்மை.

அதுவும், அண்மைய காலங்களில் செய்தி ஊடகங்கள் என இணைய வெளியை நிரப்பி வரும் ஈழத்து மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், வெறுமனே ஹிட்ஸ் என்ற மாயைக்குள் அகப்பட்டு பொய்யான செய்திகளையும், ஆபாசமான செய்திகளையும் வெளியிட்டு வருவது துரதிஷ்டமானது.

அப்படியான ஒரு சம கால கதைக்களத்தை கருவாகக் கொண்டு சசிகரன் இயக்கியிருக்கும் குறும்படம் தான் தனிகை. அவர் எடுத்துக் கொண்ட மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டிய கதைக்காகவே அவருக்கு ஒரு பாராட்டுக் கொடுக்கலாம்.

ஆனாலும், படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட விடயங்களிலும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் குறும்படம் வேறு ஒரு தரத்தில் இருந்திருக்கும்.

ஈழ சினிமாவில் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக நம்பிக்கைக்குரிய குறும்படங்களைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் சசிகரனுக்கு வாழ்த்துக்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg