Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கானா வரோவின் ‘இலவு’ குறும்படம்

In
Updated: 15:17 GMT, Aug 16, 2015 | Published: 15:16 GMT, Aug 16, 2015 |
0 Comments
1657
This post was written by : Varothayan

‘பத்து நாளில் தூக்கி வீசுவதற்கு கல்யாணம் ஒன்றும் நவராத்திரி கொலுவில் போடும் நவதானியம் அல்ல. ஆயிரம் காலத்து பயிர்’ என்னும் செய்தியோடு வெளிவந்திருக்கிறது கானா வரோவின் ‘இலவு’ குறும்படம்.

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம் இன்னமும் எங்கள் நாடுகளில் குறைந்தபாடில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் எந்தவித விசாரணைகளுமின்றி பெற்ற பெண்ணை கட்டிக்கொடுக்க இலங்கை பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இது எத்தகைய பின்விளைவுகளை கொண்டுவருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது இப்படம்.

கிருத்திகன், ஜனனி, ரஜித், ஷாலினி சார்ளஸ், கார்த்திக், தினேஷ் ஏகாம்பரம், கவிமாறன் சிவா (சிறப்புத்தோற்றம்) மற்றும் பலர் நடித்திருக்க கானோ வரோ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கின்றார்.

ஜதுர்சன், துஷ்யாந்தன், கானா வரோ ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இக்குறும்படத்திற்கு தர்சனன் அருட்செல்வன் இசையமைக்க, ரொஷன் ஒளிப்பதிவினையும், மாதவன் மகேஷ்வரன் எடிட்டிங்கையும் செய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg