Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்பூர தீப ஆராதனையின் நோக்கம்

In ஆன்மீகம்
Updated: 22:11 GMT, Apr 14, 2018 | Published: 10:24 GMT, Sep 21, 2015 |
0 Comments
1552
This post was written by : Elakkiya

கோயில்களில் கற்பூர தீப ஆராதனை காட்டும் போது மனதை ஒருநிலைப்படுத்தி வழிபடும் நாம் கற்பூர தீப ஆராதனை காட்டப்படுவதற்கான காரணத்தை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா.

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.
மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது.

இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் பிரகாரம் எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துவதாக ஆன்மீகம் கூறுகின்றது.

அதேபோன்று தீபாராதனையின் போது ஆலயமணி ஒலிக்கப்படுவதற்கும் காரணம் உண்டு.

தீபாராதனையின் போது கோயிலில் எழும் ஒலி நம் காதில் விழும். கோயிலுக்கு வரும் சிலர் லோகாயத விஷயங்களை பேசலாம். அது உண்மையான பக்தர்களின் இறையுணர்விற்கு இடையூறாக இருக்கலாம். வேண்டாத வார்த்தைகள் காதில் விழக் கூடாது என்பதற்காக ஆலயமணி ஒலிக்கப்படுகின்றது.

மணியோசை கேட்டு துர்தேவதைகள், ராட்சகர்கள் அனைவரும் ஓடிவிடுவர். அத்துடன் ஆலய மணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறது. மணிஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg