Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்?

In ஆன்மீகம்
Updated: 09:39 GMT, Sep 26, 2015 | Published: 09:38 GMT, Sep 26, 2015 |
0 Comments
1833
This post was written by : Anojkiyan

‘…. இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்…’ (லூக்.3: 11) என்றும்,

‘உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே’ (லூக்.6: 30) என்றும் இயேசு கூறுகிறார்.

‘தரித்திரனுக்குக் கொடுக்கிறவன் தாழ்ச்சியடையான்’ (நீதி.28: 27) என்றும்,

‘கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்’ (நீதி.22: 9)என்றும்,
‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்’ (நீதி.19: 17) என்றும்,
‘…. தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்’ (நீதி.14: 21) என்றும் சாலொமோன் ஞானி குறிப்பிடுகிறார்.

‘வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்’ (சங்.112: 9) என்று சங்கீதக்காரன் சொல்வதையும்,
‘… மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்’ (மத்.25: 40) என்று இயேசுவானவர் சொல்வதைப் பார்க்கிறோம்.

ஏழைகள், திக்கற்றவர்கள், சிறுமைப்பட்டவர்கள், தரித்திரர்கள், ஊனமுற்றோர்கள்… இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தர்மம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதை வேதம் போதிக்கிறது.

அந்தப் பையன் உணவின்றி உடையின்றி வாடிக் கொண்டு இருந்தாலும், ஆண்டவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். அவனது நிலைமையைக் கண்ட பெண்ணொருத்தி, ‘கடவுள் உன்னை அன்பு செய்கிறார் என்றால் உனக்கு உணவும் உடையும் தந்திருப்பாரே’ என்றாள்.

பையன் சொன்னான், ‘கடவுள் யாரோ ஒருவரிடம் அதைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் தான் கொடுக்க மறந்து விட்டார்’.
ஆம்..! ஒருவேளை அந்த ‘அவர்’ நாமாகக்கூட இருக்கலாமே..?

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg