Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லெட் சிப்ஸ் குக்கீஸ்

In
Updated: 07:25 GMT, Nov 1, 2015 | Published: 07:25 GMT, Nov 1, 2015 |
0 Comments
1322
This post was written by :

தேவையான பொருட்கள்

சொக்லெட் (துருவியது) – 2 கப்
வெண்ணெய் – 150 கிராம்
நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை – 300 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
சோடா உப்பு – 1 சிட்டிகை
முந்திரி அல்லது வால்நட் (அக்ரூட்) பொடியாக நறுக்கியது – 1 கப்
மைதா – 300 கிராம்
வெனிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
முட்டை – 2
வெண்ணெய் – சிறிதளவு

செய்யும் முறை 

முதலில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும். வெண்ணெய்யையும் சர்க்கரையையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு, உப்புச் சேர்த்து கலக்கவும். பின் எசென்ஸ் சேர்க்கவும். நுரைக்க அடித்த முட்டையைச் சேர்த்துக் கைவிடாமல் அடிக்கவும். அத்துடன் சலித்த மாவைச் சிறிது சிறிதாகக் கலக்கிக் கொள்ளவும். இறுதியாக சொக்லெட் துருவல், நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவி, மாவு தடவிய தட்டில் வைத்து 180 பாகை செல்சியஸ் சூட்டில் அவனில் வேக வைக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg