Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இம்மாத சிறப்பு விரதம்

In ஆன்மீகம்
Updated: 05:49 GMT, Nov 2, 2015 | Published: 05:00 GMT, Nov 2, 2015 |
0 Comments
1639
This post was written by :

‘தமிழ்க்கடவுள்’ முருகப்பெருமானின் பெருமையை பறைசாற்றும் உன்னத நிகழ்வான கந்தசஷ்டி வருகிற 12-ந் திகதி தொடங்குகிறது. கந்தசஷ்டி விரத்தில் முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் கொண்டாடப்படும்.

6-ம் நாள் (17-ந் தேதி) முருகப்பெருமான் கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தால், வாழ்வில் எல்லா நலங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையிலே அய்யனின் அண்ணாமலை ஜோதி, காந்த மலையிலே கலியுகதெய்வம் அய்யப்பனின் மகர ஜோதி என்று கூறுவார்கள். கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். இந்நாட்களில் பக்தர்கள் சபரிமலை அய்யப்பனுக்கு நேர்ந்துகொண்டு மண்டல கால பூஜைக்காக மாலை போடுவதும், 41 நாட்கள் விரதம் இருந்தும் வழிபடுவார்கள்.

கார்த்திகை முதல் நாளன்றுதான் சபரிமலை சன்னிதானத்தின் தங்கக்கதவுகளை மேல்சாந்தி திறந்து தீபம் ஏற்றி வணங்குவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg