Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேங்காய் எண்ணெய்யால் வாய் கொப்பளிப்பதன் பயன்

In
Updated: 07:09 GMT, Nov 3, 2015 | Published: 07:09 GMT, Nov 3, 2015 |
0 Comments
1621
This post was written by :

எண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளிக்கும் பழக்கம் இருந்து வந்தது, ஆனால் தேங்காய் எண்ணெயிலும் வாய் கொப்பளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால், பக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும். பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெயால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும். அதேபோன்று சருமம் ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும். தலைவலியிலிருந்து மற்றும் சுவாசப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதனை செய்யும் முறை : சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 10 மி.லி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். தினமும் இதை செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg