Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய ஒன்லைன் வர்த்தக நிறுவனங்களின் அன்னிய முதலீட்டு விதிகள் தொடர்பில் விசாரணை

In வணிகம்
Updated: 11:01 GMT, Nov 3, 2015 | Published: 08:17 GMT, Nov 3, 2015 |
0 Comments
1402
This post was written by :

இந்தியாவில் ஒன்லைன் வர்த்தக முறை தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு விதிகளை மீறியிருக்கிறதா என்பது தொடர்பான விசாரணையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் தங்கம், கையடக்கத் தொலைபேசி, ஏனைய வீட்டுப் பொருட்கள் முதல் மரக்கறி வரை ஒன்லைன் மூலமாக கொள்வனவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகின்றன. இதற்கான ஒன்லைன் விற்பனை நிலையங்கள் மற்றும் இணைய தளங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அன்னிய முதலீட்டிலே இயங்குகின்றன.

இந்த நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு விதிகளை மீறுகின்றனவா என்று ஆராய்ந்து அவ்வாறு மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை வருவாய் புலனாய்வு துறையிடமும், ரிசர்வ் வங்கியிடமும் ஒப்படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg