Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

AMW டயர் விநியோகஸ்தர்களுக்காக கருத்தரங்கு

In வணிகம்
Updated: 11:01 GMT, Nov 3, 2015 | Published: 09:05 GMT, Nov 3, 2015 |
0 Comments
1376
This post was written by :

இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான AMW, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தமது டயர்களின் விநியோகஸ்தர்களுக்கான வியாபார கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

குறித்த கருத்தரங்கு மௌன்ட்லெவனியா ஹோட்டலில் இடம்பெற்றது. இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த செயலமர்வில் AMW இன் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதில் நாடு பூராகவும் உள்ள பல முக்கிய விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு, தமது டயர் விநியோகத்தை அதிகரித்தல், தொழில் போட்டியில் ஏற்படும் சவால்கள், அதனை வெற்றி கொள்ளும் முறைகள் மற்றும் தமது வர்த்தக முன்னேற்றத்திற்கான உத்திகள் தொடர்பில் சிறந்த தெளிவைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் AMW இன் புதிய உற்பத்திகள் மற்றும் அவர்களின் புதிய சேவைகள் தொடர்பிலும் விநியோகஸ்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg