Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழில்நுட்பம் மீதுள்ள பிரியம் அதிகரிப்பு : துபாயில் விற்பனைக் கூடத்தைத் திறந்துள்ள அப்பிள்

In வணிகம்
Updated: 10:58 GMT, Nov 3, 2015 | Published: 10:58 GMT, Nov 3, 2015 |
0 Comments
1302
This post was written by :

தனக்கென தனி இடமும், தனிச் சிறப்பும் கொண்டுள்ள அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக தனது புதிய தயாரிப்புகளை சற்று வேகமாகவே வெளியிட்டு வருகின்றது. இவ்வாறான புதிய தயாரிப்புக்களை பல சிறப்பம்சங்களுடனே அப்பிள் வெளியிடுகின்றது.

இவ்வாறு சிறப்பம்சங்களுடன் தனது தயாரிப்புக்களை வெளியிடும் அப்பிள் நிறுவனத்திற்கு எவ்வளவு கேள்வி இருந்தாலும், அந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் தனது விற்பனைக் கூடங்களைத் திறப்பதில்லை. அதிலும் தனது பெயருக்கு ஒரு தனி இடத்தை வைத்துக்கொள்வதற்காக ஒரு சில முக்கிய இடங்களிலே அப்பிள் தனது விற்பனைக் கூடங்களைத் திறந்துள்ளன.

இந்நிலையில், துபாயில் மிக பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான மோல் ஒப் எமிரேட்சில் அண்மையில் உலகின் புகழ் பெற்ற அப்பிள் நிறுவனம், தனது நிறுவனத்தின் புதிய விற்பனைக் கூடத்தைத் திறந்துள்ளது.

இந்த விற்பனைக் கூடத்தில் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், கடிகாரம் உள்ளிட்ட அதன் இலத்திரனியில் பொருட்கள் விற்கப்படுகின்றன. வளைகுடா நாடுகளில் முதல் முறையாக அப்பிள் நிறுவனத்தின் சார்பில் திறக்கப்படும் விற்பனைக் கூடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது தயாரிப்புக்களில் உள்ள புதிய தொழில்நுட்ப முறைகள் துபாய் மக்களிடம் அதிகம் பிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இந்த புதிய விற்பனைக் கூடம் திறக்கப்பட்டுள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg