Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகியன்

In
Updated: 06:35 GMT, Nov 4, 2015 | Published: 06:35 GMT, Nov 4, 2015 |
0 Comments
1380
This post was written by :

வீடுகளில் விசேஷம் வரும் போது சுகியன் அல்லது சுசியம் எனும் ஒரு வகை உணவு செய்வது வழக்கம். இது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டியாகும். இதனை செய்யும் முறையினை இன்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு – 1 கப்
போதுமை – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
ஏலப்பொடி – சிறிதளவு
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் பயறு மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி நன்றாக வேக வைக்கவும் குக்கரில் வைத்தால் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வெந்த பாசிப்பயிரை லேசாக மசிக்கவும். இன்னுமொரு பாத்திரத்தில் வெல்லத்தை கரைத்து ஒரு கம்பிப்பதம் பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை மூட்டி வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி அதில் வேக வைத்த பச்சைப்பயிரை இட்டு சர்க்கரைப்பாகு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.

கிளரும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.

வெளி மாவிற்கு மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான சுகியன் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg