Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைசூர் பாகு

In
Updated: 06:50 GMT, Nov 4, 2015 | Published: 06:50 GMT, Nov 4, 2015 |
0 Comments
1375
This post was written by :

சூப்பரான மைசூர் பாகு சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் அதை செய்வது எப்படியென தெரியுமா? இதோ ரெசிபி படியுங்கள் செய்யுங்கள் அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 கப்
தண்ணீர் – 1 கப்

செய்முறை

வாணலியை எடுத்து அடுப்பு மூட்டி அதில் கடலை மாவை போட்டு லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.

மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போட்டால் மைசூர் பாகு தயார்!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg