Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முந்திரி முறுக்கு

In
Updated: 10:26 GMT, Nov 5, 2015 | Published: 10:26 GMT, Nov 5, 2015 |
0 Comments
1461
This post was written by :

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்
முந்திரி – 20
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீர் ஊற்றி விழுது போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி விழுது;, நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

தேவையானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg