Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு உதவ தாய்லாந்து முதலீட்டாளர்கள் இணக்கம்

In வணிகம்
Updated: 10:15 GMT, Nov 6, 2015 | Published: 10:15 GMT, Nov 6, 2015 |
0 Comments
1263
This post was written by :

இலங்கையில் ஹோட்டல்களை நிர்மாணிப்பது மற்றும் மீன் வளத்துறை, சீனி உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்து முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

தாய்லாந்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பாங்கொக் நகரில் இடம்பெற்ற இலங்கை தாய்லாந்து வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

இதன்போது அதில் கலந்து கொண்ட தாய்லாந்து முதலீட்டாளர்களே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளித்துள்ளனர். இம் மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்ட ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இன்று முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகின்றது. அத்தோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கு இடையேயான முதலீட்டு மூலோபாயங்களை அடையாளம் கண்டுகொண்டு அதில் பிரதானமான விவசாயத்துறை உற்பத்திகள், உல்லாசப் பிரயாணத்துறை, அடிப்படை வசதிகள், தொலைத்தொடர்பு உட்பட பல்வேறு விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg