Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வொக்சோல் நிறுவனம் 220,000 Zafira B ரக கார்களை மீளப்பெறுகின்றது

In வணிகம்
Updated: 12:01 GMT, Nov 6, 2015 | Published: 11:55 GMT, Nov 6, 2015 |
0 Comments
1340
This post was written by : S.K.Guna

வொக்சோல் மோட்டார் நிறுவனத்தின் Zafira B ரக கார்கள் தொடர்ச்சியாக தீப்பிடிப்பதன் காரணமாக அந்நிறுவனம் 220,000 கார்களை மீளப்பெறுகின்றது

இதுவரையில் 130 Zafira B ரக கார்களில் தீப்பிடித்துள்ளதாக முதல்கட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

தீப்பிடிக்கும் வெப்ப மற்றும் காற்றோட்ட அமைப்பை இந்த கார்கள் கொண்டிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் 2005 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வலதுபக்க ஸ்ரியரிங் அமைப்பினைக் கொண்ட Zafira B கார்களிலேயே இந்தத் தன்மை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து வொக்சோல் நிறுவனம் தெரிவிக்கையில்; வெப்பமூட்டும் மற்றும் காற்றோட்ட அமைப்பில் உள்ள பழுது காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கார்களின் மின்தடை மற்றும் மின்காப்பு இழை ஆகியவற்றில் பழுது இருப்பது தெரியவந்துள்ளதாக வொக்சோல் நிறுவன தலைவர் ரொறி ஹாவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg