Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடவுளுக்கு பயன்படுத்தக்கூடாத மலர்கள் எவை?

In ஆன்மீகம்
Updated: 05:06 GMT, Nov 7, 2015 | Published: 04:34 GMT, Nov 7, 2015 |
0 Comments
1733
This post was written by :

வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை.

வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம் பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வதளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. செண்பக மொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை.

துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை. கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். இந்த மலர்களை பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை. விலக்கப்பட்ட பூக்களை தேவைப்பட்டால் ஆலயத்தை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg