Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளி சொல்லும் செய்தி

In ஆன்மீகம்
Updated: 06:08 GMT, Nov 7, 2015 | Published: 05:11 GMT, Nov 7, 2015 |
0 Comments
1467
This post was written by :

கிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட போது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். “எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால் எனது மரண தினத்தை மக்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாட வேண்டும்” என்று கோரி இறப்பெய்தினான். அவனது கோரிக்கையை ஏற்று பூமாதேவியும் கிருஷ்ணனும் அதை வழிமொழிந்தனர்.

நமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும், கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தறுவாயில் உணர்ந்தான். ஒரு அசுரன் அத்தனை ஞானநிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினைவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி.

நம் இதயம் எப்பேர்ப்பட்ட துயரிலும் இருளிலும் இருக்கும்போதும் நமது புன்னகையால் இந்த உலகில் ஒளியை ஏற்றுவோம் என்பதைத்தான் தீபாவளி தீபங்கள் காலம்காலமாக தனது பிரகாசத்தைக் காட்டிச் சொல்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg