Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறைவனை காண ஆலயம் செல்வது அவசியமா?

In ஆன்மீகம்
Updated: 06:08 GMT, Nov 7, 2015 | Published: 05:57 GMT, Nov 7, 2015 |
0 Comments
1306
This post was written by :

ஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும்.

இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்.

அன்றாடம் கோயில் சென்றாலும் அவ்வப்போது சென்றாலும் நமக்கு கடவுளின் அருளானது தூய மனதோடு பிரார்திக்கையில் கட்டாயம் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் நமை காக்கும் இறைவனுக்கு நாம் நேரத்தை ஒதுக்குவதில் எவ்வித தவறும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg