Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்திரகலா

In
Updated: 07:49 GMT, Nov 7, 2015 | Published: 07:49 GMT, Nov 7, 2015 |
0 Comments
1369
This post was written by :

பண்டிகை காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு புதிய வகை உணவளிப்பதை எப்படி தயார் செய்கின்றோமோ, அதே போல் அவர்களுக்கு கொடுக்கும் சிற்றுண்டிகளும் இருப்பது தானே சிறப்பு! அதனால் பெயரைப்போலவே வித்தியாசமான சமையல் செய்முறை உங்களுக்கு!

தேவையான பொருட்கள்

மைதா – ஒரு கப்
நெய் – அரை கப்
சர்க்கரை – ஒரு கப்
கோவா – 35 கிராம் (சர்க்கரை இல்லாதது)
ஆரஞ்சு கலர் – கால் டீஸ்பூன்
சோடா – கால் டீஸ்பூன்
முந்திரி பவுடர் – மூன்று டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

பாத்திரத்தினை எடுத்து அதில் சர்க்கரை இல்லாத கோவாவை இட்டு ஏலக்காய் தூள், முந்திரி தூள் சேர்த்து பிசையவும். பின்னர் அத்துடன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதம் பாகு வந்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு பத்திரத்தில் மைதா மாவு சிறிதளவு தண்ணீர், கலர் பவுடர், சோடா ஆகியவற்றை கலந்து வைத்து, நெய்யை சூடாக்கி இந்த மாவுக்கலவையில் கலந்து நன்றாக பிசையவும்.

இவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல் திரட்டி நடுவில் கோவா கலவையை வைத்து சமோசா போன்ற வடிவத்தில் செய்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணை சூடாகியதும் அதில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சந்ரகலா ரெடி!!!

பிறகு, சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்த பின் எடுத்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg